NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ்மா அதிபரின் பதவி காலத்தில் மாற்றம்?

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி 60 வருட சேவையை பூர்த்தி செய்யாத பட்சத்தில் மேற்கண்ட தீர்மானம் அந்த அதிகாரிக்கும் பொருந்தும், அதன்படி அவர் பொலிஸ் மா அதிபராக பதவியேற்று மூன்று வருடங்கள் கழித்து ஓய்வு பெற வேண்டும்.

அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் எந்தவொரு அதிகாரியின் சேவைக் காலம் அதிகபட்சமாக 3 வருடங்கள் வரை வரையறுக்கப்படும்.

Share:

Related Articles