NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை அறிவிப்பு..

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். பதவியை துஷ்பிரயோகம் செய்தமை கடமையை சரியாக செய்ய தவறியமை பதவியில் செயற்படும்போது மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டமை போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேஷபந்து தென்னகோன் கண்டி தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 08 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles