எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களை எதிர்வரும் 06 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ இது தொடர்பான அறிவித்தல் கடந்த 24ஆம் திகதி நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.