NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கிய இராணுவ சிப்பாய் கைது!

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் அநுராதபுரம் – சாலியபுர முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டாரின் கம்பியை சார்ஜன்ட் உடைத்த சம்பவம் தொடர்பில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles