NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போராட்டங்களால் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் பிரசன்ன

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் இடம்பெற்று வரும் அரகலய எனப்படும் போராட்டங்களால் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு ஆனால் அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் இது ஒரு பயங்கரவாத செயல் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles