NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்!

காஸா ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டுள்ளது. இது முழு சுற்றுப்புறங்களையும் சமன் செய்துள்ளதுடன்  பலருக்கு மரணத்தையும் அழிவையும் அளித்துள்ளது.

இஸ்ரேல், முற்றுகையிட்ட காஸாவின் வெறும் 365 சதுர கிலோமீற்றர் அளவுப்பகுதியில் 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது.

காசாவின் 222,000 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 40,000 க்கும் மேற்பட்டவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அழிவுகள் வடக்கு காஸாவில் மையம் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பான வலயமாக அறிவித்திருந்த தெற்குப்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles