NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலியான இன்ஸ்டா- தற்கொலையில் முடிந்த சோகம்.

இந்தியா, மகாராஷ்ரா மாநிலத்தில் கோரேகான் எனும் இடத்தில் போலி இன்ஸ்டா கணக்கினால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது தோழியை கிண்டல் செய்யும் நோக்கில் பெண் ஒருவர் மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கொன்றை உருவாக்கியுள்ளார்.இந்தப் போலி கணக்கில் தனது தோழியுடன் ஆணைப் போல் பேசி விளையாடியுள்ளார்.இன்ஸ்டாவில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார்.

இன்ஸ்டா காதலனை நேரில் பார்க்க வேண்டும் என அப்பெண் கேட்டுக்கொண்டதையடுத்து, இன்னொரு போலியான இன்ஸ்டா கணக்கை உருவாக்கி, நான் தான் மனிஷின் தந்தை எனக் கூறி, மனிஷ் தற்கொலை செய்து இறந்துவிட்டதாக தோழியிடம் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.

கற்பனைக் காதலனான மனிஷ் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த அப் பெண் கடந்த ஜூன் 12ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் தொலைபேசியில் இருந்த குறுஞ் செய்திகளை பார்த்த குடும்பத்தினர், இது தொடர்பில் பொலிஸில் புகாரளித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்துக்கு காரணமான அவரது தோழியை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles