NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலியான புகைப்படங்களைக் கண்டறிய WhatsApp அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்!

மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்கு சொந்தமான முன்னணி செயலியான WhatsApp, கூகுள் மூலம் WhatsApp இணையப் பயனர்களுக்காக Reverse Image Search எனும் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Reverse Image Search எனும் அம்சம், வாட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தைச் சரிபார்ப்பதற்காக நேரடியாகக் கூகுளில் பதிவேற்றி சோதனை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சமானது, பயனர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்குரிய புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும்.

WABetaInfoவின் தகவல்படி குறித்த அம்சம் விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles