NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலி ஆவணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இருவர் கைது!

தரகர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் குடிவரவு குடியகல்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயது யுவதியுடன் 27 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது விமான நிலைய அதிகாரிகள் அவர்களது ஆவணங்களைப் பெற்று, அனுமதிப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, ​​சந்தேகத்திற்குரிய நடத்தையின் அடிப்படையில் அவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களது பயணப்பொதிகளை கண்காணித்த போது, ​​பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்கான போலியான தகவல்களுடன் இரு வீசாக்கள் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share:

Related Articles