NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவன் கைது..!

தம்புத்தேகம பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் போலி நாணய தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுடைய குறித்த மாணவன் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர் பேருந்து நிலையத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியபோது அவர் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது வீட்டில் இருந்து ஏராளமான போலி பணம் அச்சடிக்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles