NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலி விசாவைப் பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கைது!

போலி விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (16) குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டுபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-653 கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

அவரது அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் கனேடிய விசா குறித்து சந்தேகம் கொண்ட விமான அதிகாரிகள், அவரை குடிவரவு, குடியகல்வு பிரவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles