NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பௌத்த துறவி போல் வேடமணிந்து இலங்கைக்கு வருகைத்தர முயன்ற நபர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பௌத்த துறவி போல் வேடமணிந்து இந்தியாவில் தங்கி, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைய முயன்ற பங்களாதேஷின் பிரஜை ஒருவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பங்களாதேஷைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய சான்றிதழ்களைக் கண்டறிந்த பின்னரே அவர் குடிவரவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த கடவுச்சீட்டு போலியானது விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த சந்தேக நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் கர்நாடகாவில் உள்ள ஆசிரமம் ஒன்றில் மாறுவேடத்தில் குடியேறியுள்ளமை குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தங்கியிருந்தபோது, கர்நாடகாவில் வசிப்பதாகக் கூறி தனது பெயரில் போலி கடவுச்சீட்டை பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் வெளிவந்துள்ள நிலையில், அவர் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகின்றது.

Share:

Related Articles