NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பௌத்த விகாரையில் யுக்ரேனிய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் தப்பியோட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் யுக்ரேனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று (21) குறித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உனவடுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணி ஹபராதுவ பௌத்த விகாரைக்கு வழமையாக செல்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் போதி மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணை அணுகி ஆலயத்தின் மற்றுமொரு பகுதியை வழிபடுமாறு அழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் அழைப்பின் பேரில் குறித்த பிரதேசத்தை வழிபட்ட பெண் அங்கிருந்து வெளியேறும் போது அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles