NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்ற ChatGPT!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

Open AI நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் ChatGPTயை களமிறக்கியது. கூகுள் சேர்ச் என்ஜினுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட ChartGPT மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

மக்கள் தேடும் முடிவுகளுக்கு நொடியில் பல்வேறு தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொடுத்ததால் ChartGPTயை அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.

இது கூகுள் நிறுவனத்துக்கு தலைவலியாக மாறியது. உடனடியாக ChartGPTக்கு போட்டியாக அதேபோன்றதொரு தொழில்நுட்பத்தை உருவாக்க குழு அமைத்தது கூகுள் நிறுவனம். இது குறித்து அப்போது பேசிய கூகுள் CEO சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனமும் கூகுள் பார்ட் AI தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூகுள் ஐஃழு-வில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. மொத்தம் 25 அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டன.

அதில் ஒரு அறிவிப்பு தான் கூகுள் பார்ட். இந்தியா உள்ளிட்ட 180க்கும் அதிகமான நாடுகளில் களமிறக்கப்பட்டிருக்கும் கூகுள் பார்ட்-ஐ கூகுளின் சேர்ச் பாக்ஸில் சென்று bard.google.com என டைப் செய்தால் அந்த பக்கம் ஓபன் ஆகும். அதில்  Try Bard ஆப்ஷனைக் க்ளிக் செய்து அதன் Privacy Policyயை ஏற்க வேண்டும். அதன்பின், பார்ட்-ஐப் பயன்படுத்தலாம். மேலும், சாட்பாட்டை ஆராயவும் செய்யலாம்.

Share:

Related Articles