ஒருவர் வசிக்கும் பகுதியில் இருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் நோய்களைப் பரிசோதிக்க ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுக்கான முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், வைத்தியசாலை அமைப்பில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வருவது பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் வசிக்கும் பகுதியில் இருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் மக்களின் நோய்களைப் பரிசோதிக்க ஒரு ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்குத் தேவையான பிரதான வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவது சவாலாக இருந்தாலும், இந்தத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஆரம்ப சுகாதார சேவையை நெறிப்படுத்துவதில் சமூக வைத்திய நிபுணர்கள் மற்றும் குடும்ப வைத்திய நிபுணர்களை உருவாக்குவது முக்கியம் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.