NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டு.நகரில் அரச வங்கி கொள்ளையிடும் சம்பவம் முறியடிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)


மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள அரச வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (01) அதிகாலை 3.00 மணியளவில் குறித்த வங்கியை உடைத்து வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் பிரதான பாதுகாப்பு லொக்கர் வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து உள்ளே நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, வங்கியின் முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தனது தொலைபேசி இலக்கத்தை இணைப்புச் செய்திருந்தமையால் லொக்கரைத் தொட்டவுடன் வீட்டிலிருந்த தனது தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலிக்க துரிதமாகச் செயற்பட்ட முகாமையாளர் உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாரை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.

இதன்போது, கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த தடையவியல் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share:

Related Articles