நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி களுகங்கையின் நீர் மட்டம் உயர்வதால் பெல்மடுல்ல, நிவித்திகல, எலபாத, குருவிட்ட, இரத்தினபுரி, அயகம, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் மில்லனிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
அத்தோடு நில்வலா ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ், அத்துரலிய, மாலிம்பட, அக்குரஸ்ஸ , கம்புறுபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளை அண்மித்து வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.