தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.
இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மழைவீழ்ச்சியானது 162.5 மிமீ என வழங்கப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று காலை 08.30 முதல் இன்று காலை 7.00 மணி வரையான காலப்பகுதியில் வலல்லாவிட்டவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஹொரணை பிரதேசத்தில் 111.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.