NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபானத்தின் விலை குறைக்கப்பட மாட்டாது!

மதுபானத்தின் விலையை குறைக்க மதுவரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரசாரம் பரவுவது தொடர்பாக கலால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கலால் ஆணையாளர் சன்ன வீரக்கொடி கூறுகையில், இலங்கை கலால் திணைக்களத்திற்கு இது போன்ற கலால் வரி திருத்தம் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை அல்லது ஆலோசனை வழங்கப்படவில்லை.

இதன்படி, கலால் வரி விகிதங்களை குறைத்து மதுபானத்தின் விலையை குறைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என வெளியாகும் வதந்திகள் பொய்யானவை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles