NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபானப் போத்தலில் கிடந்த ப்ளாஸ்டிக் துண்டுகள், புழுக்கள்.

இந்தியா, திருப்பத்தூர் ஆலங்காயம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில் நபரொருவர் மதுபான போத்தலொன்றை வாங்கியுள்ளார்.

அந்த போத்தலில் ப்ளாஸ்டிக் துண்டுகளும் இறந்த நிலையில் சில புழுக்களும் இருந்துள்ளன. இதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, சரிவர பதில் ஏதும் கூறாது, போத்தலை திரும்பி பெறுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இதுதொடர்பில், குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் புகாரளித்திருந்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் கூறி பொலிஸார் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த போத்தலை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles