மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய மதுபான போத்தல்களைத் தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வாறான புதிய கொள்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுமாயின் கசிப்பு உள்ளிட்டவற்றின் பாவனை அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேநேரம் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் மதுபான பாவனை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவும் எனவும் இலங்கை வைத்திய சங்கத்தின் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர மேலும் சுட்டிக்காட்டினார்.