NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணம் – இலங்கை மகளிர் அணி இலகு வெற்றி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

அந்தவகையில், 3-0க்கு என்ற கணக்கில் இலங்கை அணி கிரிகிஸ்தான் அணி அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை மகளிர் அணி ஆட்டத்தின் முதல் செட்டில் 25-11க்கு என்ற மோசமான தோல்வியை கிரிகிஸ்தான் அணிக்கு இலங்கை வழங்கியது.

இரண்டாவது செட்டில் கிரிகிஸ்தான் அணி சற்று நன்றாக விளையாடிய போதும், இலங்கை அணி 25-20க்கு என இரண்டாவது செட்டையும் கைப்பற்றியது. தொடர்ந்து ஆரம்பமான மூன்றாவது செட்டை 25-14 என இலங்கை வெற்றிக்கொள்ள 3-0 என போட்டியை இலங்கை அணி கைப்பற்றியது.

Share:

Related Articles