NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய கிழக்கில் அதிகரித்த போரினால் தங்கத்தின் விலையில் மாற்றம் !!

தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்தே இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.

தற்போது புதிய விலையானது சமீபத்தில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.

ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ள அதேநேரம் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles