NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்தது !

கடந்த இரண்டு மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக மஸ்கெலியா மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 45 அடி குறைந்துள்ளது.

நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் 1968 ம் ஆண்டில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்க ஸ்தலங்களும் தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது.

குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், பௌத்த விகாரையில் இருந்த புத்தரின் சிலை, அதன் அருகில் இருந்த போதி மரம், இஸ்லாமிய பள்ளியின் தூபி மற்றும் கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பன வற்றுடன் வெள்ளையர்களால் கட்டப்பட்ட பாலம் என்பன தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது.

காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles