NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் நபர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மத ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத தகராறுகளை ஏற்படுத்தி நாட்டில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க நினைக்கும் பல்வேறு நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் மீது பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதை அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.

தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல்வேறு குழுக்கள் முயற்சித்து வரும் நிலையில், நாட்டில் மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் முயற்சித்து வருகின்றன.

எனவே, எந்தவொரு தனிநபரோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவோ இவ்வாறு குறுகிய நோக்கத்துடன் செயற்பட முற்பட்டால், அரசியலமைப்பின் 9ஆவது அத்தியாயம் மற்றும் 291 (ஏ), (பி) ஆகியவற்றின் பிரகாரம் தண்டணைச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share:

Related Articles