சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னணியில் குறித்த இருவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.