புத்தளத்தில் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்தச் சம்பவம் புத்தளம் – மாதம்பை பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்றுள்ளதுடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர், இந்த கொலையை புரிந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளியை கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.