NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னா ரொஷான் கொலை விவகாரம் – விசாரணைகளில் இருந்து வெளிவரும் பல தகவல்கள்!

பாதுக்கை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகரான மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் விசாரணைகளில் இருந்து வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னா ரொஷான் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் லலித் கன்னங்கரா என்ற நபர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் கடுமையாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மன்னா ரொஷான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நண்பர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பண உதவி கோரியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் லலித் கன்னங்கரா, போதைப் பொருள் வழங்குவதாக தெரிவித்தமைக்கு இணங்க, மன்னா ரொஷான் தமது உதவியாளருடன் துப்பாக்கி சூடு இடம்பெற்ற பகுதிக்கு சென்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Share:

Related Articles