NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னிப்பு கோரிய மாலைதீவு முன்னாள் அமைச்சர்!

மாலைத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகின்றது

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் மரியம், எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் .

அவற்றில் ஒன்றாக, மிகப்பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் எதிர்க்கட்சியிடம் மாலைத்தீவு மக்கள் விழ விரும்பவில்லை என்ற பதிவில், மரியம் இணைத்திருந்த படம் சர்ச்சையை ஏற்ட்படுத்தியது .

குறித்த பதிவில் இந்திய தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் அசோக சக்கரத்தை மரியம் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தனது பதிவுக்கு மரியம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக மரியம் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மாலைத்தீவு எதிர்க்கட்சியான எம்டிபி-க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனவும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles