NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரக்கறிகளின் விலை அதிகரிமரக்கறிகளின் விலை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பச்சை மிளகாய் கிலோ 800 ரூபா, தக்காளி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

கறி மிளகாய் கிலோ 650 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி செய்கை நீரில் மூழ்கியுள்ளமையே விலை அதிகரிபிற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles