NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரம் முறிந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வெல்லவாய – ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோரஆர வாவி அருகில் விறகு வெட்டுவதற்காக சென்ற பெண் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோரஆர – எதிலிவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இ ஊவா குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles