NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரம் வீழ்ந்து முறிந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட மரம் விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஸ்கோலவத்த – எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles