NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருதானை புகையிரத கூரையில் இருந்து விழுந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி…!

மருதானை புகையிரத நிலையத்தின் கூரையில் இருந்து இன்று (05) காலை தவறி விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் 5 மற்றும் 6 ஆகிய தளங்களை இணைக்கும் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறித்த நபரை கீழே இறக்குவதற்கு மருதானை பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், முற்பகல் 11.20 மணியளவில் குறித்த நபர் மேற்கூரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பில் மருதானை பொலிஸார் மற்றும் புகையிரத பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Share:

Related Articles