NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருந்தகத்தை உடைத்து ரூ.3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

கட்டுஸ்தோட்டையில் மருந்தகம் ஒன்றை உடைத்து பணப்பெட்டகத்தை திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் ஒன்றுக்குள் இரவு வேளையில் நுழைந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டகத்தை பணத்துடன் திருடிச் சென்ற நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று (23) கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் உடைக்கப்பட்டு பெட்டகம் திருடப்பட்டுள்ளதாகவும்இ அதில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் இருந்ததாகவும் மருந்தக உரிமையாளர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திஇ சந்தேக நபரை கைதுசெய்தனர். பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து சூதாடியதாக சந்தேக நபர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Share:

Related Articles