மறு அறிவிப்பு வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என அமெரிக்கா அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மற்றும் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்க குடிமக்கள் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பயங்கரவாதம், கடத்தல், ஆயுத மோதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை போன்ற காரணங்களால் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.