தென்கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போன நிலையில், அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துளள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் நேற்று (10) காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. அதற்கமைய விமானம் வித்துக்குள்ளானதில் 9 பேரும் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.