NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலேசிய ஓபன் பேட்மிண்டன் – இன்று தொடக்கம்!

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது.

ண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் சி யு ஜென்னுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் இருந்து விலகினார். மற்ற இந்திய வீராங்கனைகளான மாள்விகா பான்சோத், ஆகர்ஷி காஷ்யப், அனுபமா உபாத்யாயா ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி முதலாவது சுற்றில் சீன தைபேயின் மிங் செ லூ-தாங் காய் வெய் ஜோடியுடன் மோதுகிறது.

Share:

Related Articles