இலங்கையில் மலையக மக்களின் 200 வருடங்கள் பூர்த்தியை நினைவுகூர்ந்து தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்துவதற்கும், அச்சமூகத்தின் அபிவிருத்திக்காக தொடர்ந்து வரும் காலங்களில் மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைப் பிரஜைகளான மலையக சமூகத்தின் அபிவிருத்திக்காக கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் மற்றும் நிரந்தர வதிவிடத்துடன் கூடிய உயரிய வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை பயனுள்ள வகையிலும், வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.