NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையக மக்களுக்கு முகவரி – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மலையக மக்கள் அனைவருக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை தொடருமாறு உயர்நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது..

முவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்த  வழக்கு விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவந்த போதே உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, முவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் முதற்கட்டமாக முகவரியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமது தோட்டம் உள்ளடங்களாக அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு 200 வருடங்களாக கிடைக்காதுள்ள முகவரியை பெற்றுக்கொடுக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Share:

Related Articles