NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையக மக்கள் முன்னணியில் தலைவர் செயலாளர் பதவிகளில் மாற்றம்..!

நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலின் பின்பு மலையகத்தின் பல கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் என்பன வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அண்மையில் தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் எதிர்வரும் வருடங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக முன்னணியின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மலையக தொழிலாளர் முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் புதியர்வகளை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்ட நிலையில் இது தொடர்பில் ஒரு வாரத்தில் தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

ஏதிர்வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் மலையக மக்கள் முன்னணி எவ்வாறு செயற்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மலையக மக்கள் முன்னணியில் புதியவர்கள் பலர் இணைந்து கொள்வதற்கு தற்பொழது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் மிக விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்திலும் செயலாளர் பதவியிலும் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இந்த மாற்றங்கள் தொடர்பாக இரண்டு வாரங்களில் தேசிய சபையில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகயும் முன்னணியின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

ஏதிர்கால செயற்பாடுகளில் மலையக மக்கள் முன்னணி புதிய மாற்றத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுவள்ளதாகவும் அதற்கான எந்த விட்டுக் கொடுப்பையும் தான் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இங்கு குறிப்பிட்டுள்ளார்.இந்த கூட்டத்தில் இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதே நேரம் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் மலையக மக்கள் முன்னணியை விஸ்தரிப்பது தொடர்பாகவும் இது தொடர்பாக பல மாவட்டங்களில் இருந்தும் தன்னிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளமை தொடர்பிலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்கு விரும்புகின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களையும் இ

Share:

Related Articles