புளுமெண்டல் புகையிரத கடவை வீதியானது இன்று முழுமையாக மூடப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவசர திருத்தப் பணிகளுக்காக குறித்த வீதி மூடப்படவுள்ளதாக
புகையிரதத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் புகையிரதப் பாதையில் உள்ள புளுமெண்டல் புகையிரதக் கடவையில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இங்குருஓயா மற்றும் கலபொட இடையே புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎல மற்றும் பதுளை இடையே பாறை சரிந்ததாலும் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.