NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையேற்றத்திற்காகச் சென்றிருந்த மாணவன் கீழே விழுந்து படுகாயம்!

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் அலகல்ல மலை ஏறச்சென்று பாறையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

கேகாலை பெரகலை 8ஆவது லயன் ரெஜிமென்ட் முகாமின் அதிகாரிகள் அவரை கீழே இறக்கி மாவனல்ல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன பொலிஸ் எல்லைக்குட்பட்ட அலகல்ல மலையில் குறித்த மாணவன் உட்பட மேலும் 09 பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று முன்தினம் (09) சென்றுள்ளார்.

அலகல்ல மலையில் முகாமிட்டு நேற்று (10) பாறையில் நடந்து சென்ற போது மாணவன் கீழே விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுமார் 10 அடி கீழே விழுந்த நிலையில், பலத்த காயம் அடைந்த நிலையில், கேகாலை பெரகலை இராணுவ முகாமை சேர்ந்த குழுவினர் உரிய இடத்தில் அடிப்படை சிகிச்சை அளித்து 3 மணித்தியால சிகிச்சைக்கு பின் மாணவனை கீழே இறக்கி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர் 24 வயதான அம்பாறை கல்முனையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles