இந்தியா, ஆந்திராவில் பல மாவட்டங்களில் அதிகளவான மலை கிராமங்கள் உள்ளன.
இம் மலை கிராமங்களில் வாழும் மக்களுக்கு அவசரமாக மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது அங்கு செல்லக்கூடிய வகையில் வீதிகள் ஒழுங்காக இல்லை.இதனை கருத்தில்கொண்டு மக்களின் தேவைகளுக்காக படுக்கை வசதியுடன் கூடிய அம்புலன்ஸ் சேவையை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது.
ஒரு பைக்கில், நோயாளி படுக்கும் வகையில் பொருத்தப்பட்ட படுக்கை, ஒட்சிசன் வசதி போன்ற அடிப்படை மருத்துவ வசதிகள் அதில் உள்ளன.
மலை பாங்கான பகுதிகள், ஒடுங்கிய வீதிகளுக்கு பைக் ஆம்புலன்ஸ் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு பைக்கை செலுத்தும் மருத்துவ உதவியாளரால் நோயாளிக்கு முதலுதவி வழங்கப்படும்.
தொடர்ந்து நோயாளி பைக் அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்படும்.இத் திட்டம், விஜயநகரம், அல்லூரி, சீதாராம ராஜ், பார்வதிபுரம் மானியம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளின் இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களுக்கு உதவுதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டம் அனைவராலும் வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.