மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய முயன்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பெரும் பிரயத்தனப்பட்டு அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து பல போதைப்பொருட்கள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன விஷேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.