NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மஹர சிறைச்சாலை கைதிகள் ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அதிகாரிகளை தாக்கி சிறைச்சாலையை சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெலிசர நீதவான் இரகசிய பொலிஸாருக்கு இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

போராட்டத்தின்போது சிறைக் கட்டடங்களுக்கு தீ வைத்ததன் மூலம் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை கைதிகள் ஏற்படுத்தியதோடு, போராட்டத்தின்போது சிறையில் இருந்த சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தி அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த போராட்டத்தின்போது சிறைச்சாலை கட்டடங்களுக்கு தீ வைத்து தாக்கியதன் மூலம் கைதிகள் கட்டடங்களுக்கும் உணவுப் பொருட்களுக்கும் சுமார் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் நீதவானிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

Share:

Related Articles