NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகை உருவாக்கம்!

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள விஞ்ஞானிகள் குழு, மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகையை உருவாக்கியுள்ளது.

எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஒரு அற்புதமான உணவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சியின் ஊட்டச்சத்து மதிப்பை இந்த அரிசியில் சேர்ப்பதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ‘இறைச்சி அரிசி’யை எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளிலும், கிரக ஆய்வுகளிலும் எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு வகையான சத்தான அரிசியாக அறிமுகப்படுத்துவார்கள் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த புதிய அரிசி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது எனவும் இது வெண்ணெய் போன்ற வாசனை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles