NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை 

மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய காப்புறுதி தொடர்பில் நிபுணத்துவமிக்க ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனத்தை சுரக்ஷா காப்புறுத்திக்கு பங்காளியாக்கிக்கொள்ள இருக்கிறோம்.

இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரை நன்மை கிடைக்கிறது.

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது எனவும் தெரிவித்தார். .

Share:

Related Articles