மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் மாதந்தோறும் 950 முதல் ஆயிரத்து 200 வரையான நோயாளர்கள் புதிதாக அடையாளங் காணப்படுவதாக பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாத்திரமல்லாது, உலகளாவிய ரீதியில் புற்றுநோய் தாக்கத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உணவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள், மது அருந்துதல், புகை பிடித்தல், மன உளைச்சல் ஆகியவை இதற்கு பிரதான காரணங்களாகுமென அவர் மேலும் கூறியுள்ளார்.
“குழந்தைப் பருவ புற்றுநோயாளிகளில் 75 முதல் 80 வீதமானவர்களை முழுமையாக குணப்படுத்த முடியும். புற்றுநோயை முதலில் கண்டறிந்த உடனேயே சிகிச்சையை தொடங் கினால் முழுமையாக குணப்படுத்த முடியும்.
எவ்வாறாயினும், புற்றுநோயாளர்களுக்குத் தேவையான பெரும்பாலான மருந்துகளை நன்கொடையாளர்கள் வழங்குகின்றனர். அவர்களின் சேவை மிக முக்கியமானதாகும். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவத் தேவையும் உயர்வடைந் துள்ளது. ஆகையால், நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குரிய மருந்துகளை நன்கொடையாக பெற்றுத்தர விரும்புவோர் 0777 468503 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்” என்றார்.