NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாதம்பே காட்டுப்பகுதியிலிருந்து மனித எலும்புத் துண்டுகள் மீட்பு!

மாதம்பே, பன்னிரெண்டாவது வனப்பகுதியில் நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலின் பிரகாரம் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிலித்தனர்.

மாதம்பே, பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காட்டில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த எலும்புகள் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles