NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாத்தறை – திக்வெல்ல, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இன்று (13) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் ரீ-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Related Articles